குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.
கரூர்
தாந்தோணிமலை குறுவட்ட அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில், வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் எறிப்பந்து, கபடி, கால்பந்து, வளையபந்து இறகுபந்து, குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், குழு விளையாட்டு ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். இதையடுத்து சாதனை படைத்த மாணவிகளுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணி, பள்ளியின் தலைமை ஆசிரியை அமலிடெய்சி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சாந்தி, துணைத்தலைவர் ராஜா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களான சுசிலா, ஜீவரத்தினம் ஆகியோரை பாராட்டி வாழ்த்தினர்.
Related Tags :
Next Story