கோவில் பூசாரியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு


கோவில் பூசாரியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
x

வந்தவாசி அருகே கோவில் பூசாரியிடம் 7 பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே மழையூர் கூட்டுச் சாலையைச் சேர்ந்தவர் மகாதேவன் (வயது 55). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக உள்ளார்.

இந்த நிலையில் அவர் கோவிலில் பூஜைகளை முடித்துவிட்டு கோவிலில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது மர்ம நபர் ஒருவர் மகாதேவனின் கழுத்தில் இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிஓடி விட்டார்.

இதுகுறித்து மகாதேவன் அளித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story