தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை சாவு
தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழந்தது.
கரூர் ஆண்டாங்கோவில் பகுதிக்கு உட்பட்ட செல்வநகரை சேர்ந்தவர் மதிதாஸ். இவருடைய மனைவி கஸ்தூரி(வயது 28). இவர்களுக்கு வர்ஷிகாஸ்ரீ (வயது 2) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் உள்ள தரைத்தொட்டியில் நீர் நிரப்புவதற்காக தொட்டியை திறந்து வைத்து உள்ளனர். இந்நிலையில் குழந்தை அங்கு விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக தடுமாறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளது. இதையடுத்து வர்ஷிகாஸ்ரீயின் பெற்றோர் குழந்தையை காணாமல் தேடி உள்ளனர். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கிய நிலையில் குழந்தை கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக குழந்தையை மீட்டு காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 2 வயது குழந்தை நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.