தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி


தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி
x
தினத்தந்தி 5 Jun 2023 2:15 AM IST (Updated: 5 Jun 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலை அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலியானது.

கோயம்புத்தூர்

ஆனைமலை

பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி கிராமத்தை சேர்ந்தவர் அஜித், தெருக்கூத்து கலைஞர். இவருடைய மனைவி சாந்தி. இவர்களது மகன் அஸ்வின் (வயது 2). இந்தநிலையில் நேற்று முன்தினம் அஜித் தனது குடும்பத்தினருடன் விநாயகர் கோவில் முன்பு தெருக்கூத்து நடத்தினார். இதனால் அவர்கள் குழந்தையை கவனிக்காமல் இருந்ததாக தெரிகிறது. அப்போது கோவில் வளாகத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் ஆண் குழந்தை தவறி விழுந்தது.

இதையடுத்து குழந்தையை காணவில்லை என அஜித் அக்கம்பக்கத்தில் தேடினார். பின்னர் தண்ணீர் தொட்டியில் பார்த்த போது அஸ்வின் விழுந்து கிடப்பது தெரியவந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் குழந்தையை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story