திங்கள்சந்தை அருகே ஓடும் பஸ்சில் குழந்தையின் தங்க நகை அபேஸ்


திங்கள்சந்தை அருகே ஓடும் பஸ்சில் குழந்தையின் தங்க நகை அபேஸ்
x

திங்கள்சந்தை அருகே ஓடும் பஸ்சில் குழந்தையின் தங்க நகையை யாேரா அபேஸ் ெசய்து விட்டனர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இனையம் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்ட மகளிர் இலவச அரசு பஸ் நேற்று மதியம் திங்கள் சந்தை பஸ் நிலையம் வந்தது. அப்போது கண்டன் விளை அருகே மடவிளாகம் பகுதியை சேர்ந்த சுபிதா என்பவர் அவரது கைக்குழந்தையுடன் பஸ்சில் ஏறினார். அப்போது பஸ்சில் அதிக கூட்டம் இருந்தது. அந்த பஸ் இரணியல் கோர்ட்டு அருகே வரும் போது சுபிதாவின் கைக்குழந்தையின் கையில் கிடந்த ½ பவுன் தங்க கை சங்கிலியை காணவில்லை. அதை யாரோ அபேஸ் செய்து சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுபிதா, டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கூறினார்.

உடனே டிரைவர் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் பஸ்சை நெய்யூர் தபால் நிலையம் அருகே ஓரமாக நிறுத்திவிட்டு இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பஸ்சை திங்கள்சந்தை பஸ் நிலையத்தில் உள்ள புற காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து பஸ்சில் பயணம் செய்த அனைவரிடமும் சோதனை மேற்கொண்டனர். சுமார் ½ மணி நேரம் நடந்த சோதனையில் குழந்தையின் கைச்செயின் கிடைக்கவில்லை. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் போலீசாரிடம் இரணியல் பகுதியில் பஸ்சை நிறுத்திய உடன் இரண்டு பெண்கள் வேகமாக இறங்கி சென்றதாகவும் கூறினர்.

இந்த சம்பவம் தொடர்பாக

சுபிதா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் பயணிகள் கூறிய இடத்தின் அருகில் கண்காணிப்பு கேமராக்கள் ஏதேனும் இருக்கின்றதா என்று விசாரித்து வருகின்றனர்.

--


Next Story