அம்மன் சிலை முன் படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு

கோவை வேலாண்டிபாளையத்தில் அம்மன் சிலை முன் நாகப்பாம்பு படம் எடுத்து ஆடியது
கோயம்புத்தூர்
கோவை பி.என்.புதூரை அடுத்த வேலாண்டிபாளையத்தில் மருவூர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் அம்மனை வழிபட்டு வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவில் பூசாரி வழக்கம் போல் மாலை நேர பூஜையை முடித்து விட்டு கோவிலை விட்டு வெளியே வந்தார்.
அப்போது கோவிலுக்குள் புகுந்த நாகப்பாம்பு ஒன்று அம்மன் சிலை முன் படம் எடுத்தப்படி ஆடியது.
இதனை கண்ட பக்தர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து நாகப்பாம்பு அங்கிருந்து சென்று விட்டது.
Next Story






