தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும்


தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Oct 2023 7:45 PM GMT (Updated: 13 Oct 2023 7:46 PM GMT)

தென்னை தொழில் வளர்ச்சி அடைய பொள்ளாச்சியில் தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் என்று உயர் மட்ட குழுவினரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.

கோயம்புத்தூர்
தென்னை தொழில் வளர்ச்சி அடைய பொள்ளாச்சியில் தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம் அமைக்க வேண்டும் என்று உயர் மட்ட குழுவினரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார்.


அதிகாரிகள் குழு ஆய்வு

தென்னை மற்றும் அதை சார்ந்த தொழில்கள் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய, மாநில அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர் நேற்று பொள்ளாச்சி வந்தனர். பின்னர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாலையில் விவசாயிகளுடன் கூட்டம் நடைபெற்றது.


இதில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசும் போது, பொள்ளாச்சியில் தென்னை அதிகமாக விளைகிறது. ஆனால் தென்னை வளர்ச்சி வாரிய மண்டல அலுவலகம் சென்னையி லும், காயர் போர்டு அலுவலகம் கொச்சியிலும் ஏன் அமைக்கப் பட்டு உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.


பின்னர் அவர் மத்திய வேளாண்மைத்துறை செயலாளர் மனோஜ் அகுஜாவிடம் கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


தேங்காய் எண்ணெய்


நசிந்து வரும் தென்னைநார் தொழிலை காப்பாற்றுவது, கொப்ப ரை தேங்காய், தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று உயர்மட்ட குழு பொள்ளாச்சிக்கு வந்து ஆய்வு செய்தது. அந்த குழுவினரிடம் கோரிக்கைகள் குறித்து தெரிவிக் கப்பட்டது.


முக்கியமாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை வினியோகம் செய்ய வேண்டும். அதை நிறைவேற்ற வேண்டும் என்று மாநில அரசை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் அதை நிறைவேற்ற என்ன தயக்கம் என்று தெரியவில்லை.


கொப்பரை தேங்காய்


தற்போது கொள்முதல் செய்த 54 ஆயிரம் மெட்ரிக் டன் கொப் பரை தேங்காய் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மீண்டும் கொள் முதல் செய்யப்பட உள்ள 36 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காயை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்ய கூடாது. விற்பனை செய்தால் கொப்பரை தேங்காய் விலை மீண்டும் குறைந்து விடும். இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.


தென்னை வளர்ச்சி வாரியம்


எனவே கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காய்களை எண்ணெய்யாக மாற்றி ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். தென்னை தொழில் வளர்ச்சி அடைய தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகம், கயிறு வாரியம் அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தோம். அதை நிறைவேற்றுவதாக கூறி இருக்கிறார்கள்.


இவ்வாறு அவர் கூறினார்.


Next Story