கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

தாராபுரத்தில் காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர்

தாராபுரம்

தாராபுரத்தில் காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்வம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

காதலி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மணக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சரவணன் (வயது20). இவர் முத்தூர் அருகே உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த தாராபுரம் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந்தேதி சரவணனின் காதலி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் காதலனான சரவணன் காதலி தற்கொலை செய்த நாள்முதல் காதலியை நினைத்து மனம் உடைந்த நிலையில் கல்லூரிக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்தார். இது குறித்து பெற்றோர் பலமுறை சரவணனிடம் கேட்டும் ஒன்றும் இல்லை என சரவணன் பதில் கூறி வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் தந்தையிடம் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

சரவணன் காலையில் வெகு நேரமாகியும் எழுந்திருக்காமல் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த தந்தை பெரியசாமி அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது சரவணன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரவணனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சரவணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து அலங்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

----


Next Story