சேரம்பாடி அருகே காட்டு யானை தாக்கி கல்லூரி மாணவி உள்பட 2 போ் படுகாயம்


சேரம்பாடி அருகே காட்டு யானை தாக்கி கல்லூரி மாணவி உள்பட 2 போ் படுகாயம்
x
தினத்தந்தி 28 July 2023 1:00 AM IST (Updated: 28 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

சேரம்பாடி அருகே காட்டு யானை தாக்கி கல்லூரி மாணவி உள்பட 2 போ் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி

பந்தலூர்

சேரம்பாடி அருகே காட்டு யானை தாக்கி கல்லூரி மாணவி உள்பட 2 போ் படுகாயம் அடைந்தனர்.

பெண்களை விரட்டிய காட்டு யானை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே கோரஞ்சால், சப்பந்தோடு, சுங்கம், கண்ணம்பள்ளி உள்பட பல பகுதிகளில் காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை கோரஞ்சால் சப்பந்தோடு பகுதியை சேர்ந்த ரவியின் மகள் அஸ்வதி (வயது 20) என்பவர் கல்லூரிக்கு செல்வதற்க்காக தனது தாயான புனிதாவுடன் (42) பஸ் நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது சாலையை ஒட்டி உள்ள மூங்கில் ேதாப்புக்குள் இருந்து காட்டு யானை ஒன்று குட்டியுடன் சாலையை கடக்க முயன்றது. இதில் அந்த யானை 2 பெண்களை கண்டதும் திடீரென துரத்த தொடங்கியது. இதனால் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

படுகாயம்

எனினும் ஒரு கட்டத்தில் காட்டு யானை 2 பேரையும் துதிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. மேலும் அவர்களை காட்டு யானை தாக்கியது. இதனால் அவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு வந்தனர். பொதுமக்கள் திரண்டு வருவதை கண்டதும் காட்டு யானை குட்டியுடன் அங்கிருந்து ேவகமாக சென்றுவிட்டது. இதையடுத்து பொதுமக்கள், படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சுல்தான்பத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் புனிதா கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர் குணசேகரன் ஆகியோர் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆறுதல் கூறினர். இதில் மாணவி அஸ்வதி கூடலூர் அரசு கல்லூரியில் பி.காம்.,சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருவதும், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.காட்டு யானை தாக்கி தாயும் மகளும் படுகாயம் அடைந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story