காதலனுக்கு பாலியல் தரகர் வேலை பார்த்த கல்லூரி மாணவி கைது..!


காதலனுக்கு பாலியல் தரகர் வேலை பார்த்த கல்லூரி மாணவி கைது..!
x

சென்னையில் சக மாணவிகளை ஆசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

சென்னை மாநகருக்கு இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் சம்பவங்களை அவ்வப்போது அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. இதனை கட்டுப்படுத்த போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள லாட்ஜ் ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது லாட்ஜில் அறைகளை வாடகைக்கு எடுத்து பிரகாஷ் என்பவர் அழகிகளை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. தனது காதலியான புதுவை சிவராந்தகம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெயபிரதா என்ற 19 வயது இளம்பெண்ணுடன் சேர்ந்து பாலியல் தொழிலை நடத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து ஜெயபிரதாவை போலீசார் கைது செய்தனர். விபசார தொழிலுக்கு பல்வேறு உதவிகளை செய்ததாக சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பிரேம்தாஸ் என்ற வாலிபரும் கைதானார். இளம்பெண் ஜெயபிரதாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. சென்னையை சேர்ந்த காதலன் பிரகாஷ் என்பவரை நம்பி வந்து அவர் பாலியல் வழக்கில் சிக்கி தவித்து வருகிறார். போலீசில் பிடிபட்டதும் ஜெயபிரதா தனக்கு ஒன்றும் தெரியாது. நான் சாப்பாடு கொடுக்க வந்தேன் என்று கூறி ஏமாற்றியுள்ளார்.

இதையடுத்து போலீசார் அவரிடம் உரிய முறையில் விசாரணை நடத்தி செல்போனை வாங்கி ஆய்வு செய்தனர். அப்போது ஜி.பே.மூலம் பலர் பணம் செலுத்தி இருப்பது தெரிய வந்தது. காதலி ஜெயபிரதா போலீசில் சிக்கிய நிலையில் பிரகாஷ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கல்லூரியில் படித்து கொண்டே சக தோழிகளுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் தள்ளியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

1 More update

Next Story