முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு கடந்த 17-ந்தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் முதல்-அமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக, அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலை 10 மணிக்கு துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், உயர் கல்வித்துறை அதிகாரிகள், மாநில கல்வி கொள்கையை வகுக்கக்கூடிய குழுவின் தலைவர், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
மேலும், இக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை செயல்பாடுகள், புதிய கல்வி கொள்கை, உயர்கல்வித்துறையின் தரத்தை உயர்த்துவது, பாடத்திட்டங்களை மேம்படுத்துவது, மாநில கல்வி கொள்கை உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.