சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி


சுவர் இடிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி
x

திருவண்ணாமலையில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் சுவர் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

வீடு கட்டும் பணி

திருவண்ணாமலை பாவாஜி நகரில் 2 வீடுகளில் இடைப்பட்ட பகுதியில் காலியாக உள்ள மனை ஒன்றில் புதிதாக வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் முதற்கட்டமாக அடிதளம் அமைப்பதற்காக பில்லர் அமைப்பதற்காக பள்ளம் எடுக்கும் பணி இன்று நடைபெற்றது.

இதில் கட்டிட தொழிலாளர்கள் செங்கம் தாலுகா சே.நாச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 45), வேடநத்தம் பகுதியை சேர்ந்த ஏழுமலை மற்றும் பெண் தொழிலாளி ஒருவர் அந்த பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

சுவர் இடிந்து தொழிலாளி பலி

அப்போது பக்கவாட்டில் உள்ள வீட்டின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் கட்டிட தொழிலாளர்கள் 3 பேரும் சிக்கினர்.

இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு சென்றனர்.

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆறுமுகத்தை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஏழுமலையும், மற்றொரு பெண் தொழிலாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story