கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து சாவு


கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து சாவு
x

கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சோ.நம்பியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சிவாஜி (வயது 55), தொழிலாளி. இவர், அருகில் உள்ள அருணாசலா சர்க்கரை ஆலையில் கட்டிடம் இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது கால் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story