முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்திய நுகர்வோர் சங்கம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தினர் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள குட்டம் பஞ்சாயத்து பகுதியில் இரண்டு ஆண்டுகளாக ஒயர்மேன் பணியில் இல்லை. ஒயர்மேன் நியமிக்கக்கோரி மின்சார துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் குட்டம் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒயர்மேன் நியமிக்க வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆயிரம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது. மேலும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story