திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x

திம்பம் மலைப்பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி- 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு

தாளவாடி

கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு கன்டெய்னர் லாரி நேற்று பகல் 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. திம்பம் மலைப்பாதை 7-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. இதனால் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. கார், லாரி, பஸ் போன்ற மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. வாகனங்கள் அனைத்தும் மலைப்பாதையில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோட்டின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து பண்ணாரியில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரி பழுது பார்க்கும் பணி நடந்தது. மதியம் 1 மணி அளவில் லாரி பழுது சரிசெய்யப்பட்டு் ரோட்டோரம் அப்புறப்படுத்தப்பட்டது.

அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகியது. வாகனங்கள் அங்கிருந்து சென்றன. லாரி பழுதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story