மரத்தடியில் சமையல் செய்யும் தொழிலாளி
மரத்தடியில் சமையல் செய்யும் தொழிலாளி
கஜா புயலின் போது குடிசை வீடு தேசமடைந்ததால் மரத்தடியில் தொழிலாளி சமையல் செய்துவருகிறார். எனவே வீடு கட்ட அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிசை வீடு சேதம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்காடு ஊராட்சியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன.
இந்த கிராமத்தில் கூலி தொழில் செய்பவர்கள் குடிசை வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் கனகாம்பாள்-முருகன். கூலித்தொழிலாளிகளான இருவரும் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போத்தியப்பன், மணிகண்டன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலின் போது இவர்களது குடிசை வீடும் சேதமடைந்து சாய்ந்த நிலையில் தரைமட்டமானது. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியது. அதில் இவர்களின் பெயரும் இருந்தது. ஆனால் நிவாரணம் கிடைக்கவில்லை. மீண்டும் அணைக்காடு ஊராட்சிக்கு அருகே உள்ள முதல்சேரி ஊராட்சியில் கஜா புயலில் பாதிக்கப்பட்டு விடுபட்டவர்களின் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
மரத்தடியில் சமையல்
இந்த முகாமில் இருவரும் பதிவு செய்தனர். ஆனாலும் இதுவரை நிவாரணம் கிடைக்கவில்ைல. கணவன்-மனைவி இருவரும் கூலி தொழில் செய்து வரும் பணத்தின் மூலம் குடும்பத்ைத நடத்தி வருகின்றனர். இதனால் சேதமடைந்த குடிசை வீட்டை சரிசெய்ய முடியாமலும், குடிைச வீடு கட்ட முடியாமலும் உள்ளனர். குடிசை வீடு சேதமடைந்துள்ளதால் சமையல் செய்யவும் முடியாத நிலை உள்ளது. இதனால் கனகாம்பாள் ஒரு மரத்தடியில் வைத்து சமையல் செய்து வருகிறார். பின்னர் வெளியில் வைத்து சாப்பிட்டுவிட்டு, இரவு தூங்குவதற்கு மட்டுமே சேதமடைந்த குடிசையை பயன்படுத்தி வருகிறார்.
நிவாரணம் வழங்க வேண்டும்
இந்த குடிசையில் பள்ளிக்கூடம் செல்லும் தங்களது மகன்களை தூங்க வைப்பதற்கு மிகவும் அச்சமாக இருக்கிறது. மேலும் சமையல் செய்ய போதிய வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு குடிசை வீடு கட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனகாம்பாள் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.