மதுரைகாளியம்மன் கோவிலில் குளிர்ச்சியூட்டும் விழா
மதுரைகாளியம்மன் கோவிலில் குளிர்ச்சியூட்டும் விழா நடைபெற்றது.
திருச்சி
தொட்டியம் மதுைர காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு அம்மனுக்கு குளிர்ச்சியூட்டும் விழா நடத்தப்படும். அதேபோல் இந்த ஆண்டும் இந்த விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி திருமஞ்சனம், தீர்த்த குடம், பால்குடம், சந்தனக்குடம், பன்னீர், இளநீர், ஆகியவற்றை காவிரி ஆற்றிலிருந்து எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதன் பின் சிறப்பு பூைஜ நடந்தது. இதனை தொடர்ந்து மாலை மதுரை காளியம்மன் வெள்ளி ரதத்தில் கோவிலை சுற்றி வலம் வந்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
Related Tags :
Next Story