லிப்ட் கொடுக்க மறுத்த மாநகராட்சி ஊழியருக்கு அடி-உதை


லிப்ட் கொடுக்க மறுத்த மாநகராட்சி ஊழியருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:45 PM GMT)

கோவையில் லிப்ட் கொடுக்க மறுத்த மாநகராட்சி ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் லிப்ட் கொடுக்க மறுத்த மாநகராட்சி ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மாநகராட்சி ஊழியருக்கு அடி-உதை

கோவை கே.ஜி வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 57). மாநகராட்சி ஊழியர். சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரி கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளுடன் நின்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அந்த வாலிபர் ஸ்ரீகாந்திடம் தன்னை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று வீட்டில் விடுமாறு கூறினார். ஆனால் அதற்கு ஸ்ரீகாந்த் மறுத்தார். இதனால் அந்த வாலிபர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் ஸ்ரீகாந்த்தை தகாத வார்த்தைகள் திட்டி கீழே தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கினார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த வாலிபரிடமிருந்து ஸ்ரீகாந்த் மீட்டனர். பின்னர் இதுகுறித்து ஸ்ரீகாந்த் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார்.

வாலிபர் கைது

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (26) என்பதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் ரவிக்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story