பேரையூர் அருகே அரசு பஸ் மோதி தம்பதி பலி
பேரையூர் அருகே அரசு பஸ் மோதி கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பேரையூர்
பேரையூர் அருகே அரசு பஸ் மோதி கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரசு பஸ் மோதியது
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் சின்ன முனியாண்டி (வயது 55). இவரது மனைவி மகாலட்சுமி (50). சின்னமுனியாண்டி பேரையூரில் நர்சரி கார்டன் வைத்துள்ளார். கணவன், மனைவி இருவரும் டி.கல்லுப்பட்டியில் வசித்து வந்தனர். இந்நிலையில். நேற்று காலை இருவரும் மொபட்டில் டி.கல்லுப்பட்டியில் இருந்து பேரையூருக்கு சென்று கொண்டிருந்தனர்.
தேவன்குறிச்சி விலக்கு அருகே சென்றபோது குமுளியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற மொபட் மீது மோதியதாக கூறப்படுகிறது.
தம்பதி பலி
தூக்கி வீசப்பட்டதில் சின்னமுனியாண்டி, மகாலட்சுமி ஆகியோர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மோதி கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.