நிழற்குடையில் மூட்டை முடிச்சுகளுடன் குடியிருக்கும் தம்பதி


நிழற்குடையில் மூட்டை முடிச்சுகளுடன் குடியிருக்கும் தம்பதி
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:45 PM GMT)

நாகர்கோவில் அருகே பயணிகள் நிழற்குடையில் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு தம்பதியினர் குடியேறி உள்ளனர். இதனால், பயணிகள் மழையிலும், வெயிலும் அவதிப்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே பயணிகள் நிழற்குடையில் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு தம்பதியினர் குடியேறி உள்ளனர். இதனால், பயணிகள் மழையிலும், வெயிலும் அவதிப்படுவதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பயணிகள் நிழற்குடை

நாகர்கோவில் அருகே உள்ள கரியமாணிக்கபுரம் பகுதியில் ஒரு பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த பகுதியில் தினமும் ஏராளமான பயணிகள் பஸ்சுக்காக காத்து நிற்கிறார்கள். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்தநிலையில் இந்த நிழற்குடையில் கடந்த சில நாட்களாக ஒரு தம்பதியினர் குடியேறி உள்ளனர். அவர்கள் தங்களது துணி மணி உள்ளிட்ட மூட்ைட முடிச்சுகளை நிழற்குடையில் வைத்து தங்களது வீடு போல் பயன்படுத்தி வருகிறார்கள்.

பயணிகள் அவதி

இதனால், பஸ் ஏற வரும் பயணிகள் நிழற்குைடக்குள் நுழைய முடியாமல் வெளியே நிற்கிறார்கள். நிழற்குடை முழுவதையும் அந்த தம்பதியினர் அபகரித்துள்ளதால் பயணிகள் வெளியே நின்று மழையிலும், வெலியிலிலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுபோல் குமரி மாவட்டத்தில் உள்ள பல நிழற்குடைகளை சிலர் அபகரித்து குடியேறியுள்ளனர். சில இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாலையில் உள்ள குப்பைகளை எடுத்து வந்து சேகரித்து வைப்பதுடன் நிழற்குடையை அசுத்தம் செய்கிறார்கள்.

இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் மிகவும் சிரமம் அடைகிறார்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே, அதிகாரிகள் இத்தகைய நபர்களை அகற்றி, பஸ் ஏற வரும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

----------------


Next Story