குடும்ப தகராறில் விஷம் குடித்த தம்பதி


குடும்ப தகராறில் விஷம் குடித்த தம்பதி
x
தினத்தந்தி 18 Oct 2023 12:30 AM IST (Updated: 18 Oct 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே குடும்ப தகராறில் தம்பதி விஷம் குடித்தனர். இதில் மனைவி பரிதாபமாக இறந்தார். தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர்



பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, சாத்தூர், டி.எஸ்.நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 43). இவரது மனைவி சிந்து (37). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். முத்துக்குமார், சிந்து இருவரும் கோவை -பொள்ளாச்சி நான்கு வழி சாலை ெரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர். கடந்த 6 மாதங்களாக முத்துக்குமாருக்கும் அவரது மனைவி சிந்துவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும் இது தொடர்பாக முத்துக்குமார் குடிபோதையில் வந்து சிந்துவிடம் தகராரில் ஈடுபட்டதால் வேதனை அடைந்த சிந்து நேற்று காலை சாணி பவுடரை (விஷம்) குடித்து மயங்கி விழுந்தார். இதைக் பார்த்த முத்துக்குமாரும் அதே சாணி பவுடரை குடித்து மயங்கினார்.


இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியில் சிந்து பரிதாபமாக உயிரிழந்தார். முத்துக்குமாருக்கு டாக்டர்கள் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர்.இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story