கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 1 March 2023 1:00 AM IST (Updated: 1 March 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலம் பச்சப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருபா (வயது 24). இவருடைய மனைவி சந்தியா. இருவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கிருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து கிருபா கூறும் போது அம்மாபேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த போது சக ஊழியர்கள் 3 பேர் கடன் கேட்டனர். இதையடுத்து கடனாக பெற்று அவர்களிடம் ரூ.7 லட்சம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப தரவில்லை. தற்போது பணம் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டோம் என்று கூறினார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story