இறப்பிலும் இணைபிரியாத தம்பதி


இறப்பிலும் இணைபிரியாத தம்பதி
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி

கோயம்புத்தூர்

காரமடை

காரமடை அருகே இணை பிரியாமல் இறந்த தம்பதியால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

தம்பதி

கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு பங்களாமேடு பகுதியில் வசித்து வந்தவர் ரங்கசாமி (வயது 80).இவர் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக உதவியாளர். இவரது மனைவி பத்திரம்மாள் (வயது 70). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

ரங்கசாமி கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். சில நாட்களாக இவரது மனைவி பத்திரமாவுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ரங்கசாமி வீட்டிலேயே இயற்கை மரணமடைந்தார்.

இணைபிரியாத தம்பதி

இதனால் சோகத்தில் இருந்த மனைவி பத்திரமாளும் அன்று இரவே துக்கம் தாங்காமல் இறந்து போனார். கடந்த 50 வருடங்களாக திருமணம் ஆகி ஒற்றுமையுடன் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதி இறப்பிலும் இணைபிரியாமல் உயிர்விட்டனர். இது அந்த கிராத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. தம்பதியின் உடல்களை ஒரே நேரத்தில் வெள்ளியங்காட்டில் உள்ள மயானத்தில் அருகருகே குழி தோண்டி அவரது உறவினர்கள் புதைத்தனர். இறுதி சடங்கில் கிராமக்கள் திரளான பங்கேற்றனர்.




Next Story