கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
x

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே வெட்டன் விடுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது 60 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது பசு மாடு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டு வெளிேய கொண்டு வந்தனர்.


Next Story