கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு


கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
x

காவேரிப்பாக்கம் அருகே கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கத்தை அடுத்த பொன்னப்பன்தாங்கல் கிராமத்தில் பஜனை கோவில் தெருவில் வசித்துவருபவர் முனுசாமி மனைவி ஜெகதா (வயது 65). நேற்று இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று பன்னியூர் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த கிணற்றில் தவறிவிழுந்துவிட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த பசுமாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.


Next Story