கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு


கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
x

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்கப்பட்டது.

திருச்சி

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சி அருகே உள்ள தெற்கு தெத்தூரை சேர்ந்தவர் ராஜா. இவர் பசு மாடு வளர்த்து வருகிறார். நேற்று மாலை அவரது வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் மேய்ந்தபோது எதிர்பாராதவிதமாக, அங்குள்ள 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இது பற்றி அக்கம் பக்கத்தினர் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி கயிறு கட்டி பசுமாட்டை உயிருடன் மீட்டு, ராஜாவிடம் ஒப்படைத்தனர்.


Next Story