கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு


கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
x

கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி கருப்பூர் வக்காரமாரி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் மனைவி மஞ்சுளா. இவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை அதே பகுதியில் உள்ள அசோகன் என்பவருடைய வயலில் உள்ள தரிசு பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்றார். காலை முதல் பசுமாடு அதே பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டு வந்தது. மாலையில் வீடு திரும்புவதற்காக மஞ்சுளா பசுமாட்டை வீட்டை நோக்கி ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது அசோகன் வயலில் உள்ள மோட்டார் கொட்டகைக்கு அருகில் இருந்த வேப்பமர கிளையிலிருந்து மாடு வேப்பிலையை சாப்பிடுவதற்காக தாவி முயற்சி செய்தது. அப்போது அருகில் இருந்த 15 அடி ஆழ உறை கிணற்றுக்குள் மாடு தவறி விழுந்தது. தனது கண் முன்னாலேயே மாடு கிணற்றுக்குள் தவறி விழுந்ததை பார்த்த மஞ்சுளா பதறி அருகில் உள்ளவர்கள் உதவியை கேட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஜெயங்கொண்டம் தீயணைப்பு மீட்பு படை நிலைய அலுவலர் ராஜா தலைமையில் 8 பேர் கொண்ட மீட்பு வீரர்கள் கொண்ட படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். கிணற்றுக்குள் இறங்கிய வீரர்கள் மாட்டை கயிற்றால் பிணைத்து கட்டினர். 2 மணி நேர கடுமையான போராட்டத்திற்கு பின் பசுமாட்டை உயிருடன் தீயணைப்பு வீரர்கள் மேலே கொண்டு வந்தனர். தீயணைப்பு வீரர்களோடு அப்பகுதி விவசாயிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் பசுமாடு விழுந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story