சிறுத்தை தாக்கி பசுமாடு பலி
சேரம்பாடி அருகே சிறுத்தை தாக்கி பசுமாடு பலியானது.
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே நாயக்கன்சோலையில் சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் புகுந்து கால்நடைகள், வளர்ப்பு நாய்களை கடித்து கொன்று வருகிறது. அந்த பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று பசுமாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன. தேயிலை தோட்டம் பகுதியில் ஒரு பசுமாட்டை சிறுத்தை தாக்கி கொன்றது. தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனக்காப்பாளர் ஞானமூர்த்தி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். சிறுத்தை தாக்கி இறந்தது 3 வயது பசுமாடு என்பது தெரியவந்தது. பின்னர் சேரம்பாடி கால்நடை டாக்டர் நவீன் இறந்த பசுமாட்டின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story