2 கன்றுக்குட்டிகளை ஈன்ற பசு


2 கன்றுக்குட்டிகளை ஈன்ற பசு
x
தினத்தந்தி 5 Jun 2023 5:30 AM IST (Updated: 5 Jun 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே 2 கன்றுக்குட்டிகளை ஈன்ற பசுவை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி, விவசாயி. இவர் தோட்டத்தில் பசுமாடு ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த மாடு சினையாக இருந்தது. இந்தநிலையில் நேற்று அந்த பசுமாடு அடுத்தடுத்து 2 கன்றுக்குட்டிகளை ஈன்றது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் வியப்புடனும், ஆச்சரியத்துடனும் பசு மாடு மற்றும் 2 கன்றுக்குட்டிகளை நேரில் பார்வையிட்டு செல்கின்றனர். பசு 2 கன்றுக்குட்டிகளை ஈன்பது எப்போதாவது நடக்கும் செயல் என பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story