அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர்.
வழக்கமாக பக்தர்கள் கோவிலின் அம்மணி கோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் பக்கம் உள்ள சுற்றுச்சுவரின் அருகில் கார் மற்றும் வேனை நிறுத்துவார்கள்.
இந்த நிலையில் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டதால் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதியின்றி தவித்தனர். இதனால் திருவண்ணாமனை பே கோபுர பகுதி மட்டுமின்றி மாட வீதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.