அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாற்றுத் திறனாளிகளும் வரிசையில் நின்று சென்றதால் அவதி அடைந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாற்றுத் திறனாளிகளும் வரிசையில் நின்று சென்றதால் அவதி அடைந்தனர்.
நீண்ட வரிசையில் பக்தர்கள்
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது.
இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும், விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பக்தர்கள் நடந்து வரும் பகுதிகளில் தேங்காய் நார் விரிப்புகள் விரிக்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகள் அவதி
வழக்கமாக கோவிலுக்கு வரும் நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலி மூலம் அழைத்து வரப்பட்டு வைண்ட வாசல் வழியாக சாமி சன்னதி இருக்கும் பிரகாரத்திற்குள் செல்வார்கள்.
அவர்கள் எந்தவித சிரமுமின்றி சாமி தரிசனம் செய்ய அங்குள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி முன்பு உள்ள கேட் வழியாக அருணாசலேஸ்வரரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால் சமீப நாட்களாக தட்சிணாமூர்த்தி கேட் வழியாக வி.ஐ.பி.க்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
வைகுண்ட வாசல் பேரிகார்டுகள் மூலம் அடைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகில் உள்ள பாதையின் வழியாக கோவில் நிர்வாகத்தில் இருந்து சீட்டு வாங்கி வரும் நபர்களை மட்டுமே அனுமதித்தனர். அ
ந்த வழியாகவே மாற்றுத் திறனாளிகளும் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து துர்கை அம்மன் அருகில் உள்ள கேட் வழியாக சென்றனர்.
இந்த பாதையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றதால் நடக்கவும், நிற்கவும் முடியாத முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் அவதி அடைந்தனர்.
எனவே வரும் நாட்களில் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.