அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
அக்னி ஸ்தலம் என்று சொல்வதற்கு ஏற்ப கடந்த சில தினங்களாக திருவண்ணாமலையில் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
மே தின விடுமுறை நாளான இன்று கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தனர்.
இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க தேங்காய் நார் தரை விரிப்புகள் விரிக்கப்பட்டு அதில் தண்ணீர் ஊற்றப்பட்டு இருந்தது.
மேலும் பெரும்பாலான பக்தர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு வந்தனர்.
இதில் பலர் கார்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமல் தவித்தனர். மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்ட கார்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.