சாலையில் ஆபத்தான பள்ளம்


சாலையில் ஆபத்தான பள்ளம்
x

வாய்மேடு அருகே சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேடு அருகே சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஆபத்தான பள்ளம்

வாய்மேடு அருகே மருதூர் மாடிக்கடை பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் நெடுஞ்சாலையின் நடுவே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் கடந்த ஓராண்டுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு அந்த இடத்தில் பெரிய பள்ளம் உருவானது. இந்த பள்ளத்தை சுற்றி நெடுஞ்சாலைத்துறையினர் கம்புகளை நட்டு வேலி போன்று அமைத்து வைத்துள்ளனர். ஆனால் பள்ளத்தை சீரமைக்கவில்லை. இதன் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக அங்கு பள்ளம் அப்படியே உள்ளதால், அடிக்கடி விபத்து நடக்கிறது.

விபத்துகள்

பலமுறை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மோதி கம்புகள் சாய்ந்து உள்ளன. இதுபோன்ற விபத்துகளில் சிக்கிய பலருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை பொதுமக்களும், வர்த்தக சங்கத்தினரும் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story