ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற வேண்டும்
ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை
அரக்கோணம்-திருப்பதி பிரதான நெடுஞ்சாலையில் நாகாலம்மன் நகர் பகுதி அருகில் வணிக வளாகம், பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பாலாஜிநகர் பகுதி அருகே ஆபத்தான நிலையில் மின் கம்பம் ஒன்று உள்ளது. அதன் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. சூறைக்காற்றுடன் மழை பெய்தால் மின் கம்பம் சாய்ந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மின் கம்பத்தை மாற்ற மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story