இருள் சூழ்ந்த ஏ.டி.எம். மையம்
இருள் சூழ்ந்த ஏ.டி.எம். மையம்த்தில் மின்விளக்கை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை
அரக்கோணம் தாலுகா அன்வர்திகான்பேட்டை பஜார் வீதியில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அதில் ஒரு மாதமாக மின் விளக்குகள் எரியவில்லை. ஏ.டி.எம். மையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. 2 வாரமாக பணம் இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஏ.டி.எம். மையத்தை விட்டால் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரக்கோணம் அல்லது சோளிங்கருக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே மேற்கண்ட குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story