வந்தவாசி: தனியார் மருத்துவமனை குப்பை தொட்டியில் ஆண் சிசு சடலம்..!


வந்தவாசி: தனியார் மருத்துவமனை குப்பை தொட்டியில் ஆண் சிசு சடலம்..!
x

வந்தவாசி அருகே தனியார் மருத்துவமனையில் உள்ள குப்பைத் தொட்டியின் பிளாஸ்டிக் பையினுள் பிறந்த குழந்தையின் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையிலிருந்த குப்பைத் தொட்டியிலிருந்து துர்நாற்றம் வீசவே மருத்துவமனை ஊழியர்கள் அந்த குப்பைத் தொட்டியை சோதனை செய்துள்ளனர்.

இதில் அந்த குப்பைத் தொட்டியினுள், பிறந்த குழந்தையின் சடலம் பிளாஸ்டிக் பையினுள் போடப்பட்டு கிடந்தது தெரியவந்தது. உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த பயிற்சி டிஎஸ்பி கீர்த்திவாசன் தலைமையிலான வந்தவாசி தெற்கு போலீஸார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், பிறந்து 2 நாட்கள் ஆன ஆண் குழந்தையின் சடலத்தை தொப்புள் கொடியை கூட அறுக்காமல் சிறிய பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீஸார் உடற்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story