தலையில் காயத்துடன் பிணமாக கிடந்த விவசாயி


தலையில் காயத்துடன் பிணமாக கிடந்த விவசாயி
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் தலையில் காயத்துடன் விவசாயி பிணமாக கிடந்தார். அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் தலையில் காயத்துடன் விவசாயி பிணமாக கிடந்தார். அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயி

பொள்ளாச்சி ராஜாராமன்னா வீதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 65). விவசாயி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனியாக வசித்து வந்தார். இவரது சகோதரிகளான லோகநாயகி, பாலச்சந்திரா ஆகியோருக்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதற்கிடையில் மகாலிங்கத்துடன், அவரது அக்கா லோகநாயகி கடந்த 10 நாட்களாக தங்கி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருடன் பேசி விட்டு லோகநாயகி தூங்க சென்றார். அதன்பிறகு காலையில் எழுந்து பார்த்தபோது மகாலிங்கம் தலையில் அடிப்பட்டு ரத்த காயங்களுடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் கீழே தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலையில் காயம் இருப்பதால் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அவர் இறந்தது குறித்த முழுவிவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story