சாலையோரத்தில் இறந்து கிடந்த மயில்


சாலையோரத்தில் இறந்து கிடந்த மயில்
x

கரைப்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் மயில் இறந்து கிடந்தது.

கரூர்

கரூர் மாவட்டம் கரைப்பாளையம், ஆலமரத்து மேடு, திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் சுற்றித்திரிகின்றன. இந்தநிலையில் திருக்காடுதுறை கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் கரைப்பாளையம் தங்காயி அம்மன் கோவில் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரத்தில் இறந்த நிலையில் மயில் ஒன்று கிடந்தது. பின்னர்அவர் அங்கிருந்த ஒருவரிடம் சாக்குப்பையை வாங்கி இறந்து கிடந்த மயிலை அதில் போட்டு தனது அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். பின்னர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் தாதம்பாளையம் பள்ளமருதபட்டி வனச்சரகத்தை சேர்ந்த வனசரகர் சாமியப்பன் தலைமையிலான குழுவினர் திருக்காடுதுறை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று இறந்து கிடந்த மயிலை பெற்று சென்றனர். இந்த மயில் நோய்வாய்ப்பட்டு இறந்ததா? அல்லது விவசாய தோட்டங்களில் விஷம் வைத்து மயிலை யாரேனும் கொன்றனரா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story