தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்தது
இந்த புயல், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும்14ம் தேதி காலை வங்கதேசம் - மியான்மர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை,
அந்தமான் அருகே தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இது நேற்று காலை மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.
இந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வுமண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு மோக்கா என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயல் இன்று இரவு தீவிர புயலாகவும், நாளை மிகத்தீவிர புயலாகவும் வலுப்பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல், வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும்14ம் தேதி காலை வங்கதேசம் - மியான்மர் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றின் ஈரப்பதத்தை ஈர்த்தபடி வடக்கு நோக்கி இந்த புயல் நகர்கிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story