காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்பட்ட வலையில் சிக்கிய மான்


காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்பட்ட வலையில் சிக்கிய மான்
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:45 PM GMT)

காட்டுப்பன்றிகளுக்கு வைக்கப்பட்ட வலையில் மான் சிக்கியது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி மற்றும் அதன் சுற்று வட்டார வனப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான புள்ளி மான்கள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் மான்கள் தண்ணீர் தேடி அருகில் உள்ள ஊர்களுக்குள் வர தொடங்கி உள்ளன. இந்நிலையில் நேற்று கமுதி அருகே மரக்குளம் கிராமத்தில் வயலில் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட வலையில் 4 வயதுடைய ஆண் புள்ளிமான் ஒன்று சிக்கியது. அதன் கொம்பு வலையில் சிக்கியதால் மானால் வெளியே வரமுடியவில்லை.

நீண்ட நேரம் போராடியதால் மான் சோர்வடைந்தது. இதுகுறித்து அறிந்த கமுதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர்கள் சந்திரசேகரன், பார்த்திபன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வலையில் சிக்கிய புள்ளிமானை பத்திரமாக மீட்டு அடர்ந்த காட்டுப் பகுதியில் பத்திரமாக விட்டனர்.


Next Story