நேரடி நெல் விதைப்பு கருவியின் மூலம் செயல்விளக்கம்


நேரடி நெல் விதைப்பு கருவியின் மூலம் செயல்விளக்கம்
x
தினத்தந்தி 31 Dec 2022 10:14 AM GMT (Updated: 31 Dec 2022 10:16 AM GMT)

நேரடி நெல் விதைப்பு கருவியின் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை

நேரடி நெல் விதைப்பு கருவியின் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நேரடி நெல் விதைப்பு கருவியின் மூலம் பண்டிதப்பட்டு கிராமத்தில் செயல்விளக்கம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் வழிகாட்டுதலின் படி வேளாண்மை அலுவலர் சோபனா தலைமை தாங்கினார்.

இதில் நெல் விதைப்பு கருவியினால் ஆட்கள்குறைவு, நேரம் குறைவு, குறைந்தளவு விதை ஆகிறது என்றும், ஒருதூருக்கு 60-க்கு மேல் தூர்கள் வெடிக்கப்படுகிறது என்றும், இதன் மூலம் மகசூல் அதிகாிக்கிறது போன்ற பயன்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்தும், இதனால் குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கிறது என்றும் விவசாயிகளுக்கு வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாலமுருகன் விளக்கம் அளித்தார்.

இந்த செயல்விளக்கத்திற்கான ஏற்பாடுகளை உதவி தொழிநுட்ப மேலாளர்கள் சுகன்யா, சத்தியநாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story