ஓடும் பஸ் மீது விழுந்த டிஜிட்டல் பேனர்
ஓடும் பஸ் மீது விழுந்த டிஜிட்டல் பேனர்
கன்னியாகுமரி
கருங்கல்:
மார்த்தாண்டத்தில் இருந்து மேல்மிடாலம் நோக்கி தடம் எண் 87 'இ' என்ற அரசுபஸ் நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை உதச்சிக்கோட்டை பற்றிச்சன்விளையைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் கிள்ளியூர் ஏலாக்கரையில் வந்தபோது, சாலையின் இடதுபுறம் இருந்த அஜின் என்பவரது கடையில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் காற்றில் பறந்து பஸ்சின் மீது விழுந்தது. இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து பஸ் டிரைவர் பரமேஸ்வரன் கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story