ஓகைப்பேரையூரில் இடிந்து கிடக்கும் குப்பை கிடங்கு


ஓகைப்பேரையூரில் இடிந்து கிடக்கும் குப்பை கிடங்கு
x

ஓகைப்பேரையூரில் இடிந்து கிடக்கும் குப்பை கிடங்கு

திருவாரூர்

ஓகைப்பேரையூரில் இடிந்து கிடக்கும் குப்பை கிடங்கிற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குப்பை கிடங்கு கட்டிடம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள ஓகைப்பேரையூரில் அந்த பகுதியில் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அள்ளி சென்று அவற்றை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளாக தரம் பிரிப்பதற்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு குப்பை கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டது. இதனால் தேங்கி கிடக்கும் குப்பைகளை அந்த பகுதி தூய்மை பணியாளர்கள் அந்த கட்டிடத்திற்கு கொண்டு சென்று தரம் பிரித்தனர். நாளடைவில் அந்த கிடங்கின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து, விரிசல்கள் ஏற்பட்டு அந்த கட்டிடம் இடிந்து விழுந்து விட்டது. ஆனால் இடிந்து விழுந்த இடத்தில் இதுவரை புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் தேங்கி கிடக்கும் குப்பைகள் தற்போது மாற்று இடத்தில் வைத்து தரம் பிரிக்கப்படுகின்றன.

புதிதாக கட்டித்தர வேண்டும்

இடிந்து விழுந்த குப்பை கிடங்கு இருந்த இடம் மட்டுமே குப்பைகளை தரம் பிரிப்பதற்கு ஏதுவாக உள்ளதாகவும், வீடுகள் இல்லாத இடத்தில் குப்பை கிடங்கு இருந்ததால் எவ்வித இடையூறும் இல்லாமல் இருந்ததாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே இடிந்து விழுந்த குப்பை கிடங்கு கட்டிடத்தை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிதாக குப்பை கிடங்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story