உளுந்தூர்பேட்டை அருகேவாய்க்கால் தண்ணீரில் பிணமாக மிதந்த மாற்றுத்திறனாளிபோலீஸ் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே வாய்க்கால் தண்ணீரில் பிணமாக மாற்றுத்திறனாளி மிதந்தாா். இதுகுறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனா்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் ஜெயராமன் (வயது 38). மாற்றுத்திறனாளி. இவருக்கு ஜெயபாரதி என்கிற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயபாரதி, ஜெயராமனை விட்டு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதை எண்ணி அவர் வேதனையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பரிக்கல் குறுக்கு சாலை அருகே உள்ள வாய்க்காலில் உள்ள தண்ணீரில் ஜெயராமன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஜெயராமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.