மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற மாற்றுத்திறனாளி திடீர் சாவு


மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற மாற்றுத்திறனாளி திடீர் சாவு
x

வேலூாில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற மாற்றுத்திறனாளி திடீரென உயிரிழந்தார்.

வேலூர்

வேலூர் வேலப்பாடி சேர்வை முனுசாமி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 44), மாற்றுத்திறனாளி. இவர், தனது 4 சக்கர மோட்டார் சைக்கிளில் வேலப்பாடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள மின்கம்பத்தில் மோதி நின்றது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று அவரை மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story