கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி மாணவர் சாவு


கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி மாணவர் சாவு
x

கிணற்றில் தவறி விழுந்து மாற்றுத்திறனாளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள சங்காயிபட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கமலராஜா (வயது 15). மாற்றுத்திறனாளி. இவரது பெற்றோர் கேரளாவில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் கமலராஜா ராக்கிப்பட்டியில் உள்ள தனது தாத்தா கோவிந்தராஜ் வீட்டில் தங்கி இருந்து சுண்ணாம்புக்காரன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் வீட்டின் அருகே கமலராஜா தனியாக பந்தை ேமலே தூக்கி ேபாட்டு கொண்டு விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது அங்குள்ள கிணற்றில் பந்து விழுந்தது. இதனை கமலராஜா எடுக்க சென்றபோது, தவறி கிணற்றில் விழுந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் மற்றும் முசிறி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கமலராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story