இரு தரப்பினரிடையே தகராறு; 3 பேர் கைது

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் அருகே உள்ள மாம்பழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ஏழுமலை (வயது 34). இவர் தனது கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக பெங்களூருவில் இருந்து வந்திருந்தார். அப்போது மதுபோதையில் யாரையோ திட்டிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஜோதி (50), அருள்பாண்டியன் (28), சக்திவேல் (23), நடேசன் மகன் ஏழுமலை (55) ஆகியோர், எங்களை பார்த்துதான் திட்டுகிறாயா எனக்கேட்டு ஏழுமலையை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏழுமலை, காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஜோதி உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்பாண்டியன், நடேசன் மகன் ஏழுமலை ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதேபோல் நடேசன் மகன் ஏழுமலை, காணை போலீசில் மற்றொரு புகார் செய்தார். அந்த புகாரில், தன்னை பரமசிவம் மகன் ஏழுமலை தாக்கியதாக கூறியிருந்தார். அதன்பேரில் ஏழுமலையை போலீசார் கைது செய்தனர்.