பயன்பாட்டுக்கு வராத புறக்காவல் நிலையம்


பயன்பாட்டுக்கு வராத புறக்காவல் நிலையம்
x
தினத்தந்தி 23 Dec 2022 12:30 AM IST (Updated: 23 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

இடையக்கோட்டை அருகே பயன்பாட்டுக்கு வராமல் புறக்காவல்நிலையம் உள்ளது.

திண்டுக்கல்

இடையக்கோட்டை அருகே உள்ள மார்க்கம்பட்டிக்கு கரூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக அங்குள்ள மாம்பாறை முனியப்பசுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏரளாமான பக்தர்கள் வந்து கிடாய் வெட்டி வழிபாடு நடத்தி செல்கின்றனர்.

பொதுமக்கள் அதிகம்பேர் வந்து செல்வதால் குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில் மார்க்கம்பட்டியில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. இது, கட்டுப்பட்டு பல மாதங்கள் உருண்டோடி விட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி புறக்காவல் நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

1 More update

Next Story