கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து வீடு வீடாக ஆய்வு


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து வீடு வீடாக ஆய்வு
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து வீடு வீடாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வாலாஜா நகராட்சி கச்சாலன் தெருவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வினை மேற்கொண்டார். அப்போது மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்தவர்களிடம் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்றவைகளை வாங்கி சோதனை செய்தார். மேலும் குடும்ப ஆண்டு வருமானம், சொந்தமாக நிலம் உள்ளதா, என்ன வேலை செய்கிறார்கள், குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர், சொந்தமாக கார் உள்ளிட்ட ஏதேனும் வாகனம் உள்ளதா என்று வீடு வீடாக சென்று கேட்டறிந்து, தகவல்களை கைப்பேசி சேவையில் பதிவேற்றம் செய்தார்.

ஆய்வின்போது தாசில்தார் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் மற்றும் வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

கலந்து கொண்டனர்


Next Story