அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு


அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 2:59 PM IST)
t-max-icont-min-icon

கமுதி அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே கொண்டுநல்லான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிற்றம்பலம் என்ற வேல்பாண்டி (வயது 44). விவசாயி. இவர் நேற்று கொண்டுநல்லான்பட்டி கிராமத்தில் இருந்து வெளியூர் செல்வதற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றார். சாலையோரத்தில் டிராக்டர் ஒன்று நிற்பதை பார்த்து இருசக்கர வாகனத்தை விலக்க முயன்ற போது அதில் இருந்து தவறி விழுந்தார். கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே வேல்பாண்டி பரிதாபமாக இறந்தார்.இது குறித்து நெருநாழி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story